உத்தர பிரதேச இடைத்தேர்தல் : திடீரென வெடித்த மோதலில் கற்களை வீசி தாக்குதல்! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசத்தில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், திடீரென வெடித்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீராபூர் சட்டமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  மீராபூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்ரோலி கிராமத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் வெடித்தது. இந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கியது வாக்களித்து வந்தவர்களிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.  இருந்த போதிலும், பாதுகாப்பு நலன் கருதி அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரெண்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar pradesh by election stone pelting attack in a sudden clash


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->