பாஜகவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சமாஜ்வாதி.! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!  - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் 3-ஆம் கட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 103 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

வரும் 20-ஆம்தேதி உத்தரப்பிரதேசத்தின் 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் 3-ஆம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இந்த 627 வேட்பாளர்களில் 103 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று தேர்தல் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சமாஜ்வாதி கட்சியில் போட்டியிடும் 55 வேட்பாளர்களில் 21 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இரண்டாவதாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் 55 வேட்பாளர்களில் 20 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும், 

பகுஜன் சமாஜ் வேட்பாளர்களில் 18 பேர்,
காங்கிரஸ் வேட்பாளர்களில் 10 பேர், 
ஆம்ஆத்மி வேட்பாளர்களில் 11 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

utter paradesh crime candidate list 2022


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->