வாரணாசி ஞானவாபி மசூதி விவகாரம் || உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.! - Seithipunal
Seithipunal


வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் பாகங்கள் இந்து கோவில் முறைப்படி, குறிப்பாக ஞானவாபி மசூதி சுற்றுச்சுவரில் அமைந்துள்ள சிங்கார கௌரி அம்மன் சிலைக்கு தினமும் பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு அளிப்பட்டு உள்ளது.

இது சம்மந்தமான வழக்கில், ஞானவாபி மசூதியில் ஆய்வும் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மசூதியில் வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு செய்ய அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் குழு ஒன்றை நீதிமன்றம் நியமித்து இருந்தது.

இந்த ஆய்வு நடத்துவதற்கு மசூதி நிர்வாகம் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் கள ஆய்வு நடத்த முடியவில்லை என்று, அஜய் குமார் மிஸ்ரா வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதே சமயத்தில் அஜய் குமார் மிஸ்ராவை மாற்றவேண்டும் என்று மசூதி நிர்வாகம் சார்பில் மனு வழங்கப்பட்டிருந்தது

இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிமன்றம், அஜய் குமார் மிஸ்ராவை மாற்ற முடியாது என்றும்,  மசூதியை கள ஆய்வு செய்து, வருகின்ற 17 ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

வாரணாசி நீதிமன்ற உத்தரவு தரவுகளை ஆய்வு செய்தபின் இந்த வழக்கை ஏற்கலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varanasi Gnanavapi Mosque Affairs in supreme court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->