#தேர்தல் தேதி அறிவிப்பு.. ராகுல் காந்தி தொகுதி மக்கள் ஏமாற்றம்.! - Seithipunal
Seithipunal


224 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் வரும் மே 24ஆம் தேதி உடன் ஆட்சி காலம் முடிவடைகிறது. இதனையடுத்து, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கர்நாடகா மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது ‌.

சமீபத்தில் ராகுல் காந்தி எம்.பி மீதான குற்ற வழக்கு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியாகியது. இதனை தொடர்ந்து, ராகுல் காந்தியின் எம் பி எம்பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே, அவரது தொகுதியான வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பொழுது வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என்று அத்தகுதி மக்கள் எதிர்பார்த்த நிலையில், இது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vayanad Constituency By Election Did Not Announced By Election commission


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->