காந்தியை கொன்ற.. காமராஜரை கொல்ல முயன்ற ஆர்.எஸ்.எஸ் கும்பல்.. திருமாவளவன் தீவிரம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டி பகுதியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், " நேரு ஒரு ஜனநாயக சக்தி. அவரே ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடுக்க வேண்டும் நினைத்து இருந்தால் அது எவ்வளவு அபாயகரமான இயக்கமாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

இவர்கள், புனிதராக நினைத்து பல கோடி ரூபாய் மதிப்பில் சிலை வைத்துள்ள பட்டேல் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பை வளர விடுவது நாட்டிற்கு ஆபத்து. இதனால், பெரும் பாதிப்பை நாம் சந்திக்க நேரிடும்.

எனவே இப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்பை வளர விடக்கூடாது என்று கூறி சர்தார் பட்டேல் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தடை செய்தார். இதனால்தான் இந்த அமைப்பை வளர விடக்கூடாது என்று நாங்களும் கூறுகிறோம். பெருந்தலைவர் காமராஜர் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரை கொலை செய்ய முயற்சித்தது ஆர்எஸ்எஸ் அமைப்பு. 

அப்படிப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை காமராஜரை மதிப்பவர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள்? காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கும்பல்.. காமராஜரை கொல்ல முயன்ற கும்பல் தமிழ்நாட்டில் ஊடுருவக் கூடாது என்பதுதான் எங்களது நோக்கம்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vck speech In Guindy about rss Rally


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->