மதுரையில் மீண்டும் பதற்றம்! அதிமுக முன்னாள் எம்எல்ஏ உறவினரின் வாகனங்கள் தீவைப்பு! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டி அருகே கருவனூர் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவதில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் மற்றும் திமுக கிளைச் செயலர் வேல்முருகன் தரப்பினருக்கு இடையே கடந்த ஜூன் மாதம் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் வேல்முருகன் தரப்பினர் கருவனூரிலுள்ள முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்னம்பலத்தின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி அங்கிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துச் சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பிலும் சுமார் 18க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் வீட்டில் இருந்த ரூ.5 லட்சம், 5 சவரன் நகை மற்றும் சில ஆவணங்கள் திருட்டு போனதாக அவரது மனைவி பழனியம்மாள் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் கருவனூரில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலத்தின் உறவினர் வீட்டு முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு நேற்று இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த தீ வைப்பு சம்பவத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் சரக்கு வேன் முற்றிலுமாக எரிந்தது. இதனால் கருவானூரில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vehicle burnt Former AIADMK MLA Ponnambalam relative house


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->