வெல்லத்தின் மெல்ட்டிங் பாயிண்ட் தெரியுமா உங்களுக்கு? திமுகவை வச்சு செய்யும் நெட்டிசன்களின் கலக்கல் மீம்ஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பு, பச்சரிசி, வெல்லம், புலி, ஏலக்காய், மஞ்சள்தூள், துவரம் பருப்பு, கோதுமை, ரவா உள்ளிட்ட இருபத்தி ஒரு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு துணிப்பை ஒன்றும் இந்த 21 தொகுப்புடன் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசால் கொடுக்கப்பட்டுள்ள இந்த பொங்கல் தொகுப்புகள் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் எழுந்து வருகிறது. 

மேலும், புலியில் பள்ளி செத்து கிடந்ததாக கூறிய நபரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அவரின் மகன் மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்நிலையில், நேற்று திமுகவின் ஆதரவு செய்தி ஊடகம் ஒன்றின் விவாத மேடையில், திமுகவை சேர்ந்த சரவணன் என்பவர் வெல்லத்தின் உருகும் வெப்பநிலை உங்களுக்கு தெரியுமா? வெல்லம் உருகத்தான் செய்யும்., இது கூட தெரியாதா உங்களுக்கு என்று, அந்த திமுகவின் ஆதரவு ஊடகத்தின் நெறியாளரை பார்த்து கேள்வி எழுப்பினார்.

தற்போது இந்த குறிப்பிட்ட இந்த வார்த்தை மட்டும் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஆம்.,

மார்கழி மாதத்தில் எப்படி வெல்லம் உருகியது? 
திமுகவுக்கு ஏதாவது தெரியுமா? 
இதற்கே இப்படி என்றால் பங்குனி மாதத்தில் என்ன சொல்வார்கள்?
பங்குனி மாதத்தில் தமிழகத்தில் வெல்லம் விற்பனை செய்யப்படுவதில்லையா?
தமிழகம் முழுவதும் பங்குனி மாதத்தில் உருகிய வெல்லத்தை தான் மக்கள் வாங்கி செல்கின்றனரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இது குறித்து நகைச்சுவையான மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன. அதில் உங்களின் பார்வைக்காக.,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VELLAM Melting point dmk memes


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->