வேலூரில் ஐயப்ப பக்தர்களுக்கு சைவ உணவில் மாமிசம் கொடுத்த போலீஸ்! எஸ்பி போட்ட உத்தரவு!
Vellore TN Police
வங்கதேச இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வேலூரில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த ஐயப்ப பக்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் போலீசார் தரப்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில், ஐயப்ப பக்தர்கள் உட்பட அனைவருக்கும் சைவ உணவு வழங்கப்பட்ட நிலையில், அதில் மாமிச துண்டு இருந்ததாக புகார் எழுந்தது. இதனால், ஐயப்ப பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.
இது குறித்து வேலூர் எஸ்.பி மதிவாணன் தெரிவித்ததாவது:
கைது செய்யப்பட்டவர்களுக்கு காவல்துறையினர் எப்போதுமே சைவ உணவு தான் வழங்குவது வழக்கம். சைவ உணவில் அசைவம் இருந்ததாக கூறப்படும் புகாரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்.