'அரசியலில் கெளரவத் தோற்றம் போல விஜய் வருகிறார்'; விஜய்யை கிண்டலடித்த கார்த்தி சிதம்பரம்..!
Vijay is coming into politics like a dignified presence
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். இது அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர். "பெரியார் சர்ச்சை தேவையில்லாதது. நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. சீனா உருவாக்கியுள்ள AI கருவி உலகத்தையே தற்போது உலுக்கி வருகிறது.
பங்குசந்தைகளில் பல நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனில் பலருக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள். பொருளாதாரம், வேலையின்மை என அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளன. ஆனால், என்ன உணவு சாப்பிட வேண்டும், தனிமனித உரிமைகள் இவைகள்தான் சர்ச்சை ஆகின்றன.

நம் அரசியல் மேடை போகும் திசை மிகவும் வருத்தம் அளிக்கிறது. விஞ்ஞான ரீதியான, அறிவுபூர்வமான பொருளாதாரம் குறித்த விவாதங்கள் நடக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், விஜயின் அரசியல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கார்த்தி சிதம்பரம் அவர்கள், 'அரசியலில் கெளரவத் தோற்றம் போல விஜய் வருகிறார்' என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.
English Summary
Vijay is coming into politics like a dignified presence