விஜய் உறுதியான அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் - தவெக மாநாட்டிற்கு விசிக துணை பொதுச்செயலாளர் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

இதனையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு அதன் தலைவர் சகோதரர் திரு. விஜய் தலைமையில் இன்று விக்கிரவாண்டியில் நடக்க இருக்கிறது.

மாநாட்டு மேடையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள முகப்புகளில் தமிழ்நாடு அரசியலின் கொள்கை ஆசான் தந்தை பெரியார், இந்திய அரசியலின் அடையாளம் புரட்சியாளர் அம்பேத்கர், மக்கள் தலைவர் பெருந்தலைவர் காமராசர், அடிமைத்தனத்தை எதிர்த்த வீர பெண் களப்போராளிகள் வேலுநாட்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களை வைத்து தமிழ் மக்களின் பொது மனநிலையையும், உறுதியான இலட்சிய அரசியலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

தொடர்ந்து, தனது அரசியல் பயணத்தை இதன் வழி அமைத்துக் கொள்வதன் மூலம் கொள்கை ரீதியான அரசியல் களத்தில் முக்கிய பங்காற்றிடவும், அவரது  இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும் எனவும் சகோதரர் திரு. விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay shines a light on assertive politics vck deputy secretary general congratulates tvk conference


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->