கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - தமிழக வெற்றிக்கழக மாநாடு! வெளியான முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள மிக பிரமாண்டமான இந்த மாநாட்டிற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாளை காலை ஆலோசனை நடைபெற உள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "தலைவரின் அறிவுறுத்தல்படி, முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா குறித்து, மாநாட்டுக் குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு. சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில், 18.10.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர்.

1.இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை,2.கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை, 3.சமூகப் பொறுப்புணர்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது , 4.வெற்றிக் கொள்கைத் திருவிழா - விளக்கவுரை, 5.மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு
எனவே, இக்கலந்தாய்வில் அனைத்துக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழக, புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Tamilaga Vettri Kazhagam Conference


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->