இதனால் தான் ராகுல் காந்தி தலைவர் பதவியில் போட்டியிடவில்லையா? முக்கிய புள்ளி தகவல்.!  - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் போட்டியிடவில்லை. 

இந்த தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கே.என்.திரிபாதி, சசிதரூர் உள்ளிட்டோர் வேட்பாளர் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் லேட் போட்டியிடப்படுவதாக கூறப்பட்டது. 

அவர் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மாநிலங்களவை எம்பி விஜய சிங் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

அப்பா இடத்தை நிரப்ப போகும் விஜய் வசந்த்.. தேர்தலில் போட்டியிடுவது குறித்து  பரபரப்பு பேட்டி.!! - Seithipunal

ஆனால், தான் மல்லிகார்ஜுனன் கார்கேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் இதனால் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். 

இத்தகைய சூழலில், ராகுல் காந்தி ஏன் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பது பலரது கேள்வியாக இருந்தது. இது குறித்து தமிழக எம்பி விஜய் வசந்த் இன்று குழித்துறையில் நடந்த சமூக நல்லிணக்க மத சங்கிலியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், "மக்கள் பணிகளை ராகுல் காந்தி பார்க்க விரும்புவதாகவும், கட்சிப் பணிகளை எனது குடும்பத்தை தவிர்த்த ஒருவர் பார்க்க வேண்டும்." என்றும் ராகுல் காந்தி கூறியதாக கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay vasanth about ragul ganthi why did not participate in congress leader election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->