வெளியான செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


எலக்ட்டிரிக் வாகனம் சந்தைக்கு வரும் முன்பே அதன் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "வேலூரில் எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும்போது பேட்டரி வெடித்து தந்தை மகள் பலியானார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார், பைக்குகளை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு எலக்ட்ரிக் கார் , பைக்குகளை விற்பனை செய்து வரும் நிலையில், பைக் சார்ஜ் செய்யும்போது பேட்டரி வெடித்து இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது மக்களிடையே ஒருவித அச்ச உணர்வையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

எலக்ட்ரிக் பைக் சார்ஜ் செய்யும் போது தானாகவே வெடிப்பது என்பது அதன் தரத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. எனவே, எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தைக்கு வரும் முன்பே அதனுடைய தரம் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். 

இதன்மூலம் தரமற்ற வாகனங்கள் விற்பனை செய்வது தடுக்கப்படுவதோடு, விபத்துகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். 

அப்போதுதான் மக்களுக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது நம்பிக்கையும் ஏற்படும் . எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த தந்தை மகள் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட எலக்ட்ரிக் பைக் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்"

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth say about Electric Bike Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->