மத்திய பட்ஜெட் இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக உள்ளது.. தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


நேற்று பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்திய பட்ஜெட் இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக உள்ளது. 

ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம்,  வேளாண் பொருட்களை ரூ.2.37 லட்சம் கோடிக்கு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம்‌,  மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அனைத்து மாநில மொழிகளில் 200 கல்வித் தொலைக்காட்சிகள்,  டிஜிட்டல் கரன்சி, இ பாஸ்போர்ட், வங்கி சேவைக்குள் தபால் நிலையங்கள் கொண்டுவரப்படும் உள்ளிட்ட  பல முக்கிய வரவேற்க கூடிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.  

அதேவேளையில் இன்றைய பொருளாதாரத்தின் நிலையை அறிந்து தனி நபரின் வருமானத்தை உயர்த்தக் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது.  தனிநபர் வருமான வரி விலக்கு தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இது நடுத்தர மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.  கட்டுமான பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது, பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது போன்ற அறிவிப்புகள் இடம் பெறாதது ஏமாற்றத்தை தருகிறது.   

மாவட்டம்தோறும் தொழிற்சாலைகள் அமைப்பது, வேலை வாய்ப்பை அதிகரிப்பது, தேசிய நதிநீர் இணைப்பது உள்ளிட்ட திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.  எல்ஐசி பங்கு விற்பனை, நீர்பாசனத் திட்டங்களில் தனியார் மயம் உள்ளிட்ட அம்சங்கள் வேதனை அளிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில்,  மருத்துவ துறைக்கு வரவேற்க கூடிய அளவுக்கு புதிதாக எந்த அறிவிப்பும் இல்லை.  2022-2023 ஆம் நிதி ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், விவசாயமும், விவசாயிகளும் செழிக்கும் வகையில் மாவட்டம்தோறும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பது தொடர்பான அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பான அறிவிப்பு  இடம்பெறாதது கவலை அளிக்கிறது. இதேபோல் அனைத்து மக்களுக்கும் வீடு,  கழிவறை, சாலை வசதி போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினாலும், அது செயல்வடிவம் பெற்றால் மட்டுமே வரவேற்க முடியும். மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எனவே இனிப்பும் கசப்பும் கலந்த கலவையாக மத்திய பட்ஜெட் உள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth says about budget


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->