சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி! இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இருப்பதால், இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ ஆக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர், தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவும் ஜூலை 14ஆம் தேதி முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக,தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்ததால் விக்கிரவாண்டியில் திமுக-பாமக இடையே நேரடி மோதல் நிலவி வருகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி உட்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிமுக, தேமுதிக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததால், அவர்களின் ஓட்டுக்களை பெற அனைத்து அரசியலுக்கு கட்சிகளும் மும்முரம் காட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி இடை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இன்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

அதனால் அணைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிர செய்துவருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்க இருக்கிறது. இதன் முன்னேற்பாடு பணிகளை போலீசார் துணையுடன் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi by Election campaigning ends today at 6 pm


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->