விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு! அண்ணாமலைக்கு வழி விடுகிறாரா எடப்பாடி? - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் புகழேந்தி கந்த ஏப்ரல் ஆறாம் தேதி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியின் அதிகாரமும், பண பலமும் ஒரு சேர செயல்படும் என்பதை  காரணமாக தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் கூட்டணியில் உள்ள தேமுதிகவும் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது அதிமுக. அதிலும் சில இடங்களில் டெபாசிட் இழந்து மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டது அதிமுக தொண்டர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

இருந்த போரிலும், எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் போன தேர்தலை விட கூடுதல் வாக்குகள் பெற்றிருக்கிறோம் என்று வழக்கம்போல சதவீத புள்ளிவிவரங்களை தெரிவித்தார். அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றால் தொகுதியின் எண்ணிக்கையை சொல்வதும் தோல்வியுற்றால் பெற்ற வாக்குகளின் சதவீதத்தை குறிப்பிடுவதும் வழக்கமாகிவிட்டது.

அதிமுக தமிழகத்தை ஏறக்குறைய 35 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கிறது. இதற்கு வித்திட்டது திண்டுக்கல் இடைத்தேர்தல்தான். கட்சி ஆரம்பித்து சில மாதங்களிலேயே  1972ல் எம்ஜிஆர் திண்டுக்கல்லில் மாயத்தேவர் என்ற வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்து வெற்றி பெற்ற வைத்தார்.  அந்தத் தேர்தலில் திமுகவிற்கு மூன்றாம் இடம் தான் கிடைத்தது. ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை சாமானியர்களிடம் எடுத்துரைப்பதற்கு தேர்தலை அரசியலில் கட்சிகள் பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.

ஆனால் சமீப காலங்களாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற அளவுக்கு ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டது. திமுகவிற்கு திருமங்கலம் ஃபார்முலா என்றால் அதிமுகவிற்கு கும்மிடிப்பூண்டி ஃபார்முலா என்ற வரலாறு உள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு 2017 ஆர் கே நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் விடுவார் என வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது கொடுக்கப்பட்ட 20 ரூபாய் டோக்கன் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

2023 இல் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில்தேர்தலில் ஈவி கேஎஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். அப்போதும் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதற்காக அனைவரையும் ஓர் இடத்தில் அடைத்து வைத்தது, வருட கணக்கில் பணம் கொடுத்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே வட தமிழகத்தில் வலுவாக உள்ள பாமக இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறும் என்பதில் ஐயமில்லை.

கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்ளும் போது ஆளுங்கட்சிக்கு எதிராக பல வலுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்வார். அது மக்களின் கவனத்தையும் பெறும். ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் பல இடங்களில் அதிமுகவை முந்திக்கொண்டு இரண்டாம் இடத்திற்கு பாஜக வந்திருக்கிறது.

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் நடப்பதால்  ஊடகங்களின் கவனம் முழுவதும் விக்கிரவாண்டி தொகுதியை நோக்கியே இருக்கும்.  2026 தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்துள்ளதால், பாமக பாஜக இடையே ஆன உறவு மேலும் வலுப்பெறும். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை புறக்கணித்து இருப்பது பிஜேபியும், அண்ணாமலையும் வளர்வதற்கு வழி வகுக்கும் என்று அரசியல் விமர்சகர்களும், அதிமுகவில் ஒரு பிரிவினரும் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் வரும் இரண்டு வருடங்களில் ஆளுங்கட்சியின் மக்கள் விரோத போக்கை வலுவான ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து  வைத்தால் மட்டுமே அதிமுகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதே நிதர்சனம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi Byelection, Edapadi K Palanichamy boycott


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->