விருதுநகர் தொகுதியில் கடும் போட்டி..203 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் பின்னடைவு!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், விருதுநகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் மீண்டும் 203 வாக்கு வித்தியாசம்த்தில் பின்தங்கி உள்ளார்.

இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. கேரளாவில் முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. கேரளா திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி 39 நாடாளுமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி ஒரு நாடாளுமன்ற தொகுதியில் முன்னிலை பகுதி வருகிறது. குறிப்பாக பாஜக கூட்டணியில் வங்கம் வைக்கும் பாமக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக விருதுநகர் தொகுதியில் போட்டுவிட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். திமுக சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். காலை முதல் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில் தேமுதிக விஜய பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக மாணிக்கம் தாகூருக்கும் அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் 40 வாக்குகள் மட்டுமே வித்தியாசமாக இருந்த நிலையில், தற்போது 23 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்து வருகிறார். இதனால் மீண்டும் விஜய பிரபாகரன் பின்னடைவை சந்தித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar constituency Vijay Prabhakaran lags behind by 203 votes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->