தமிழகம்: பட்டியல் இன கர்ப்பிணி பெண்ணை எரித்து கொலை! சாதி மாறி திருமணத்தால் நடந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் பட்டியல் இன கர்ப்பிணி பெண்ணை எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெம்பக்கோட்டை டி.கரிசல்குளம் ஊராட்சி எல்.மேட்டூரைச் சேர்ந்த கமலி (வயது 24) என்பவருக்கும், ஏ.லெட்சுமியாபுரத்தைச் சேர்ந்த ஜான்கில்பர்ட் பிரேம்ராஜ் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

கமலி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் மாமியார் பவுண் (பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்) தன்னை சாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும், தான் சமைத்தால் சாப்பிட மறுப்பதாகவும் கமலி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

கமலி கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த வாரம் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கமலியின் கணவர் ஜான்கில்பர்ட் பிரேம்ராஜ் மற்றும் உறவினர் தங்கதிருப்பதி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இந்த படுகொலை சம்பவத்தில் கைதானவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் சாதி ரீதியிலான பாகுபாடு மற்றும் வன்முறையின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Viruthunagar Pregnant Lady Brutal Murder case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->