காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது பா.ஜ.,வுக்கு வாக்களிப்பதற்கு சமம், அரவிந்த் கெஜ்ரிவால்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது மறைமுகமாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதற்கு சமம் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவியதை சுட்டிக்கட்டி அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

கோவா சட்டப்பேரவைக்கு வரும் 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக போட்டியிட்டது. இதில் தோல்வியடைந்த அக்கட்சி தற்போது நடைபெற உள்ள தேர்தலில் மிகவும் துல்லியமாக திட்டமிட்டு ஆட்சியை பிடிக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்குமே 40 சட்டசபைத் தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது.

பிப்ரவரி 14 ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆனால் தற்போது 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பா.ஜ.,வுக்கு தாவியுள்ளனர். இது குறித்து விமர்சனம் செய்த அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலற்ற நேர்மையான ஆட்சி வேண்டுமென்றால் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கால் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அவர்கள் மறைமுகமாக பா.ஜ.,வுக்கு வாக்களிப்பதாக பொருள்படும் என்றும் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்தார்.

அண்மையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் கட்சி தாவலில் ஈடுபட்டதை அடுத்து கோவாவை பொறுத்தவரை காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான் என்று குறிப்பிடும் வகையில் அவர் விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Voting for the Congress is equivalent to voting for the BJP Arvind Kejriwal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->