சத்தீஸ்கர், மிசோரோம் தேர்தல் - விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு..! - Seithipunal
Seithipunal


90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஷ்கர் சட்டசபைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக இன்று 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த 20 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் இருபத்தைந்து பேர் பெண்கள் ஆவர்.

இந்தத் தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் ஆரம்பமாகி பிற்பகல் 5 மணி வரை நடைபெறுகிறது. அதே சமயம் பாதுகாப்பு சிக்கல் நிறைந்த 10 தொகுதிகளில் பிற்பகல் மூன்று மணிக்கு நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில், மொத்தம் 170 பேர் போட்டியிடுகின்றனர்.

இதனை முன்னிட்டு, மிசோரமில் காலை 7 மணியளவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்காளர்கள் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்று, தங்களுடைய வாக்குகளை செலுத்த ஆர்வமுடன் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

voting start at chateesgarh and mizorom assembly election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->