வயநாடு நாடாளுமன்ற தேர்தல் : அதிகாரப்பூர்வமாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. மேலும் அதே நாளில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி அங்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை முன்னிறுத்துவதில் தீவிரம் கட்டி வருகின்றனர்.

முன்னதாக வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அந்த கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று  பிரியங்கா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wayanad parliamentary election priyanka gandhi officially filed her nomination


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->