பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங்கிரசுக்கு தாவல்! அதிர்ச்சியில் பாஜக தலைமை!
WB BJP MLA joint to TMC
மேற்கு வங்க மாநிலத்தின் ஹல்தியா சட்டப்பேரவைத் தொகுதியின் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) உறுப்பினராக இருந்த தாபசி மண்டல், இன்று அந்த மாநிலத்தின் ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியில் இணைந்துள்ளார்.
தாபசி மண்டல் தனது கட்சி மாறுவதற்கான காரணமாக, "பாஜக, பிரித்தாளும் அரசியலை முன்னிறுத்தி செயல்படுகிறது. அந்த அணுகுமுறையை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியின் தலைமையில் பணியாற்றுவதற்குத் தாம் விருப்பம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாபசி மண்டலின் இந்த முடிவு, மேற்கு வங்க அரசியலில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. கடந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனது தாக்கத்தை அதிகரித்திருந்த நிலையில், தாபசி மண்டல் போன்ற முக்கிய உறுப்பினர்கள் கட்சி மாறுவதாக அறிவிப்பது, அந்த கட்சிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.