கருத்துக்கணிப்புகளை நம்பவில்லை - இந்தியா கூட்டணி நிச்சயம் வெல்லும் - காங்கிரஸ் தலைவர்கள் கருத்து!! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்று மாலையில் பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. அதில் பெரும்பாலான நிறுவனங்கள் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கூறின.

எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி கட்சிகள், இந்தியா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்று உறுதியாக நம்பிய நிலையில், இந்த கருத்துக்கணிப்புகள் அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கருத்துக்கணிப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.

டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், "இந்தியா கூட்டணி சுமார் 300 இடங்களை எளிதாகப் பிடிக்கும். பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் தோல்வியடையும்" என்று கூறியுள்ளார். கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார், "நான் பொதுவாக கருத்துக்கணிப்புகளை நம்புபவனல்ல. கர்நாடகாவில் கண்டிப்பாக காங்கிரஸ் இரட்டை இலக்கங்களில் தான் வெற்றி பெறப்போகிறது" என்று கூறியுள்ளார்.

பிரியங் கார்கே "மக்கள் இந்தியா கூட்டணிக்கு தான் நிச்சயம் வாக்களித்திருப்பார்கள். எங்களுக்கு மக்களின் மேல் நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் கூறுகையில், "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே இருந்துள்ளன. நாங்கள் தேர்தல் முடிவுக்கு மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We Wont Believe in Exit Poll Says Congress Alliance Leaders


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->