மேற்குவங்க பாஜக வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 4ம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்து ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அபிஜித் கங்கோபாத்யாய் பேசினார்.

 மக்கள் இடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அபிஜித் கங்கோபாத்யாய் பேசுகையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பேனர்ஜி தர குறைவாகவும் மிகவும் மோசமாக பேசியதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். இந்த நிலையில், பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய் வரும் இருபதாம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal BJP candidate Election Commission notice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->