வாஷ்-அவுட் ஆன காங்கிரஸ்! தட்டி தூக்கிய மம்தா! கதிகலங்கி நிற்கும் ராகுல்!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் இருந்த ஒரே ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ-வும் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உடன், திரிணாமல் காங்கிரஸ் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கிய மம்தா பானர்ஜி, இன்று மேற்கு வங்கத்தில் மூண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார்.

ஆனால், அவரை நீக்கிய காங்கிரஸ் கட்சி மேற்குவங்க மாநிலத்தில் இருந்த தடம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கிறது. ஆம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில கூட வெற்றிபெற வில்லை.

இருந்த எம்எல்ஏவும் தற்போது ஆளும் திருநாமல் காங்கிரஸில் இணைந்து உள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் மேற்குவங்க மாநிலத்தில் வாஷ் அவுட் ஆகி உள்ளது.

திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி முன்னிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஹெரான் விஸ்வாஷ் திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நோக்கத்தில் காங்கிரஸ் தலைமையில் மேஹா கூட்டணி அமைக்க ராகுல் காந்தி திட்டமிட்டு வரும் நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் ஒரு காலத்தில் ஆளுமை கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏ.,வையும் மம்தா பானர்ஜி தங்களது பக்கம் இழுத்து இருப்பது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும், இன்னும் சொல்லப்போனால் ராகுல் காந்தியையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராகுல்காந்திக்கும், காங்கிரசுக்கும் இதன் மூலம் மம்தா சொல்லவருவது என்ன? "காங்கிரஸ் இல்லாத மேற்கு வங்காளம்" உங்களுக்கு இங்கு வேலை இல்லை என்பதாகத்தான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal Congress MLA joint to TMC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->