காங்கிரசின் பாராளுமன்றத் குழுத் தலைவர் யார் தெரியுமா..? - Seithipunal
Seithipunal



நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியிலும், காங்கிரஸ் தலைமையிலான கட்சிகள் இந்தியா  கூட்டணியிலும் போட்டியிட்டன. இதில் பாஜக கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.


காங்கிரசின் இந்தியா கூட்டணி 234 இடங்களில் வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளதால், பிரதமர் மோடி நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி பெற உரிமை கோரினார்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம். பி. க்கள் கூட்டம் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், வெற்றி பெற்ற எம். பி. க்கள், ராஜ்யசபா எம். பி. க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

அக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெக்கப்பட்டுள்ளார். மேலும் மக்களவை எதிர்கட்சித் தலைவராகவும் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப் படுவார் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமறக் குழுத்தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை முன்மொழிந்தார். இதையடுத்து பிற தலைவர்கள் அதை வழிமொழிந்ததையடுத்து சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றத் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who is Congress Parliament Leader


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->