தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்..? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு கிடைத்துள்ள ஆதரவு..?
Who will be the next Chief Minister of Tamil Nadu The support received by Vijay in the poll
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அடுத்த முதலமைச்சராக யார் வருவார் என்ற மக்களில் கருது கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பாக நாடு முழுவதும் கருத்து கணிப்புகளை நடத்தும் சி.வோட்டர் என்ற நிறுவனம் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
குறித்த கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால் முதலமைச்சராக யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு 27 சதவீதம் பேர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவீத ஆதரவும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு 09 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.

அத்துடன், இந்த கணிப்பில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது..? என்ற கேள்விக்கு 15 சதவீதம் பேர் மிக மிக திருப்தியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 36 சதவீதம் பேர் திருப்தி என்று கருத்து கூறியுள்ளனர். 25 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி இல்லை என்று கூறியுள்ளனர்.இதில், 24 சதவீதம் பேர் பதில் சொல்ல இயலாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்ததாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் எப்படி அமைந்துள்ளது..? என்ற கேள்விக்கு 22 சதவீதம் பேர் அவர் மிக மிக அற்புதமாக செயல்படுவதாக மிகுந்த திருப்தி தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று, தி.மு.க. அரசின் செயல்பாடுகளில் மிகவும் திருப்தி இருக்கிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் நன்கு அமைந்து இருக்கிறதாகவும், தமிழக மக்களின் கருத்துக்களில் தெரிய வந்துள்ளது. அதற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் கருது கணிப்பின் படி அதிக பேரால் ஆதரவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் வளர்ச்சி இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்துள்ளமையும் கருத்து கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
English Summary
Who will be the next Chief Minister of Tamil Nadu The support received by Vijay in the poll