மகாராஷ்டிராவில் தேர்தல் நடக்குமா?...இன்றுடன் முடியும் வேட்பு மனுத்தாக்கல்!...தொடர்ந்து நீடிக்கும் கூட்டணி இழுபறி!
Will there be an election in maharashtra candidacy filing ends today continuing alliance tug of war
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதிலும், தொகுதி பங்கீட்டினை முடிவு செய்யும் பணிகளிலும் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 38 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இதில், தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நிலவி வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், இரு கூட்டணியிலும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய நேற்று இரவு விடிய, விடிய கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், இரு கூட்டணிகளிலும் தொகுதி பங்கீட்டு நிறைவடையாதது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Will there be an election in maharashtra candidacy filing ends today continuing alliance tug of war