கேரளா வெடி விபத்து - 10 பேர் கவலைக்கிடம்..! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரில் உள்ள அஞ்சுதம்பலம் வீரரேர்கவு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நள்ளிரவில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன.

அப்போது கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறி, குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகளின் மீது விழுந்து எரிந்தது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

இந்த சம்பவத்தில் சுமார் 154 பேர் படுகாயமடைந்த நிலையில் அனைவரும் சிகிச்சைக்காக காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பத்து பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காசர்கோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
பட்டாசுகள் அனுமதியின்றி குடோனில் வைக்கப்பட்டிருந்தன. இந்த விபத்து தொடர்பாக கோவில் நிர்வாக குழு தலைவர், செயலாளரை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர் என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten peoples seriously in kerala festival died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->