இயக்குனர் அமீருக்கு சம்மன்! சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது‌.

ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் உள்ளிட்டவருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்து வந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை சம்பந்தமாக இயக்குனர் அமீர் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். மேலும் இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBS special court notice to director Ameer director Ameer


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->