அதிர்ச்சி!...தீபாவளி எதிரொலி : சென்னையில் விமான கட்டணம் பன் மடங்கு உயர்வு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திங்கள் கிழமை முதலே கிளம்பி வருகின்றனர்.

இதற்கிடையே, ரயில் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.  அதன்படி, தினமும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை யொட்டி, விமான கட்டணங்கள் பன் மடங்கு உயர்ந்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் கட்டண விவரம் பின்வருமாறு :

* கோவைக்கு ரூ.3,474-ஆக இருந்த கட்டணம் இன்று ரூ.7,872 முதல் ரூ.13,428 வரை உயர்வு.

* திருச்சிக்கு ரூ.2,382-ஆக இருந்த விமான கட்டணம் இன்று ரூ.8,211 முதல் ரூ.10,556 வரை உயர்வு.

* மதுரைக்கு ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் உயர்வு.

* சேலத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.3,300 கட்டணம்; இன்று ரூ.8,353 முதல் ரூ.10,867 வரை உயர்வு.

* கொச்சிக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.2,592; இன்று ரூ.4625 முதல் ரூ.6510 வரை விமான கட்டணம் உயர்வு.

* டெல்லிக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.5,475; இன்று ரூ.5,802 முதல் ரூ.6,877 வரை கட்டணம் வசூல்

* ஐதராபாத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.2,813 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் இன்று ரூ.3,535 முதல் ரூ.7,974 வரை உயர்வு.

* திருவனந்தபுரத்திற்கு ரூ.3,477-ஆக இருந்த விமான கட்டணம் இன்று ரூ.6,185 முதல் ரூ.18,501 வரை உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock diwali reverberations airfare in chennai increased manifold


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->