திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழிபாடு! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இன்று திருவாரூர் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், இதில் அக்கட்சியினர் தீவிர பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியை  தொடங்கி வைப்பதற்காக இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருவாரூர் வந்தடைந்தார் .

அப்போது அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன், பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவிலில் உள்ள மூலவர் தியாகராஜர் மற்றும் கமலாம்பாள் சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்த நிலையில், அப்போது  அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பித்தனர்.  பின்னர், அவருக்கு கோவிலில் இருந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worship of union minister nirmala sitharaman at thyagarajar temple in tiruvarur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->