யூடியூபர் இர்பானுக்கு அரசியல் பின்புலம்?...அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடும் கண்டனம்!
Youtuber Irfan political background minister m subramanian strongly condemned
பிரபல யூடியூபர் இர்பான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் கருவில் உள்ள பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர் தனது யூடியூப் சேனலில் பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 24-ம் தேதி யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில், குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய நிலையில், விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில் யூடியூபர் இர்பானின் மனைவி தொடர்பான மருத்துவ ஆவணங்களை கைப்பற்றிய செம்மஞ்சேரி போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை என்றும், இர்பானின் செயல் மன்னிக்கக்கூடியது அல்ல; கண்டிக்கக்கூடியது என்று கூறினார்.
மேலும், இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்று கூறிய அவர், சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.
English Summary
Youtuber Irfan political background minister m subramanian strongly condemned