மாரிதாஸ் வழக்கில் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு.!
YoutuberMaridhas case feb
முதுகளத்தூர் மணிகண்டன் மரணம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து மாரிதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட கருத்துக்களுக்காக போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
505 (1)(2), 124ஏ, 504,153ஏ பிரிவுகளில் வழக்குப் பதிந்தது செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற கிளை அந்த உத்தரவில் தெரிவித்தது. இருப்பினும், மாரிதாஸ் மீது மேலும் 1 வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
யூடியூபர் மாரிதாஸ் மீது போடப்பட்டிருந்த 2வது வழக்கையும், இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்குள்ளாகும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கையும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சற்றுமுன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
YoutuberMaridhas case feb