ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ். சர்மிளா!
YS SharmilaReddy Andhra state Congress head
கடந்த 2023 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.
அதன் தொடர்ச்சியாக ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்போவதாக அறிவித்தார்.
தொடர்ந்து அன்றைய தினமே டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒய்.எஸ்.ஷர்மிளா தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், நேற்று ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளாவை நியமிக்கவே அவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ். சர்மிளா! ரெட்டியை நியமித்து, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
English Summary
YS SharmilaReddy Andhra state Congress head