பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளி முதல்வர் அதிரடியாக கைது.! பின்னணியில் ஆளும் கட்சி பிரமுகர்.!
YSR congress Man Daughter issue head master arrested
ஆந்திர மாநிலம் : சித்தூர் மாவட்டத்தில் பலமனேரி பகுதியில் பிரம்மரிஷி என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மிஸ்பா என்ற மாணவி தொடர்ந்து முதல் மதிப்பெண் எடுத்து வந்துள்ளார்.
இதே வகுப்பில் படித்து வந்த ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் சுனில் என்பவரின் மகள் பூஜிதா என்ற மாணவி இரண்டாம் மதிப்பெண் பெற்று வந்துள்ளார். பூஜிதா தொடர்ந்து இரண்டாம் இடத்தை மட்டுமே படித்து வந்ததால், இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் மாணவி மிஸ்பா இருக்கும்வரை தன்னால் முதலிடம் பிடிக்க முடியாது என்றும் தெரிவித்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து ஆளும் கட்சிப் பிரமுகர் அழுத்தத்தின் பெயரில், அந்த பள்ளியின் ஆசிரியர் மாணவி மிஸ்பாவிற்கு டிசி கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளி மாணவி, மன உளைச்சல் காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் அந்த தற்கொலை கடிதத்தில்,
"அப்பா என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.,
என்னால் உங்களுக்கு பல பிரச்சனைகள் வருகிறது.,
என்னுடைய நெருங்கிய தோழியான பூஜிதா தான் என்னுடைய மரணத்திற்கு காரணம்.,
அப்பா என்றும் உங்களை விட்டு என்னால் போக முடியாது.,
இன்று உங்களை விட்டு மீண்டும் வர முடியாத இடத்துக்கு நான் செல்கிறேன்.,
என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் பூஜிதா மட்டும்தான். பூஜித்தான் மட்டும்தான்" என்று அந்தக் கடிதத்தில் மாணவி மிஸ்பா தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி கேட்டு மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவிக்கு நீதி வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் ரமேஷ்யை, போலீசார் அதிரடியாக இன்று கைது செய்துள்ளனர். மேலும், அவரை ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அழைத்துசெல்லவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
English Summary
YSR congress Man Daughter issue head master arrested