ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜினாமா.. அதிர்ச்சியில் ஜெகன் மோகன்.!! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு ஒய்.எஸ்.ஆர்  ங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றார். 

அதன்பிறகு அவர் ஆந்திராவில் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார். இதனுடைய இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என அறிவித்திருந்தார். தற்போது மூன்று ஆண்டுகள் நெருங்குவதால் அமைச்சர்களை மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்தார்.

இதனிடையே இன்று புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி, ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர ஆளுநருக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அனைத்து துறை அமைச்சரிடம் இருந்து இராஜினாமா கடிதம் பெறப்பெற்றது.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில் மாற்றி அமைக்கப்படும் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ மேக்கதொட்டி சுச்சரிதா ராஜினாமா செய்துள்ளார். சமாதானம் செய்ய வீட்டுக்கு சென்ற  எம்.பி. மோபிதேவியிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் சுச்சரிதா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YSR Congress party MLA resin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->