ஷர்மிளாவுக்காக "YSR விஜயம்மா" போட்ட வீடியோ; முதல்வருக்கு ஷாக்.!! அதிரும் ஆந்திரா - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தலிலும் வரும் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் மறைந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜசேகர் ரெட்டி பிரிந்த பிறகு அவரது நினைவிடத்திற்கு செல்லாத ராகுல் காந்தி தற்போது அவருடைய மகள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவரது நினைவிடத்திற்கு செல்லாத ராகுல் காந்தி தற்போது அவருடைய மகள் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்ததோடு ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு தற்போது ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்திற்கு சென்று ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார். 

ஆந்திர பிரதேசத்தில் ஷர்மிளா தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அரசியல் களத்தில் குதித்துள்ள நிலையில் ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற குழப்பம் நிலவியது.

இந்த நிலையில் கடப்பா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தன் மகள் ஷர்மிளாவுக்கு வாக்களிக்கும்படி ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் மனைவியும் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயாருமானஜயம்மா கோரிக்கை வைத்துள்ளார்.

ஒய்.எஸ் ராஜசேகர் அடியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஷர்மிளாவுக்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YSR wife vijayamma support to Sharmila


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->