திடீர் திருப்பம்.!! காங்கிரஸ் - ஒய்.எஸ்.ஆர் கூட்டணி! முக்கிய புள்ளிகள் டெல்லியில் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சோனியா காந்தி உடன் ஒய்.எஸ் ஷர்மிளா சந்திப்பு!!

தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சந்திரசேகர ராவுக்கு எதிராக ராஜசேகர் ரெட்டியின் மகள் ஒய்.எஸ் ஷர்மிளா கடுமையான அரசியலை முன்னெடுத்து வருகிறார். அதேபோன்று காங்கிரஸ் கட்சியும் சந்திரசேகர ராவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறது. இதற்கிடையே பொது எதிரியான சந்திரசேகரராவை இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சியுடன் ஒய்.எஸ் ஷர்மிளா கை கோர்ப்பார் என தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் ஒய்.எஸ் சர்மிளா காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசி உள்ளார். ஷர்மிளாவின் தந்தை ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த நிலையில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராகவும் இருந்துள்ளார். அவருடைய மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜெகன்மோகன் ரெட்டி ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கி தற்போது ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றி முதல்வராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில் அவருடைய தங்கை ஓ.எஸ் சர்மிளா தெலுங்கானாவில் ஓ.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி மூலம் சந்திரசேகர ராவுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசி உள்ளார். ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து எதிர்வரும் தெலுங்கானா சட்டமன்ற பொது தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே இண்டியா கூட்டணியின் 3வது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளதால் இண்டியா கூட்டணியில் இணையும் சில கட்சிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு இன்று அறிவிக்கப்பட்டால் புதிய கட்சிகளின் தலைவர்கள் நாளை நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடன் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா சந்தித்து இருப்பதாகல் இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YSSharmila met Sonia Gandhi in delhi today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->