தமிழகம் | கணவன் உடல் அருகேயே உயிரிழந்த மனைவி! வாழ்விலும், சாவிலும் ஒன்றாக பயணம்! - Seithipunal
Seithipunal


குடியாத்தம் அருகே கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கௌதம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (65 வயது). இவரின் இவரின் மனைவி அஞ்சலி (60 வயது). 

இவர்களுக்கு இரண்டு மகன், ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக சேகருக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டது.

நேற்று (சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரின் மனைவி அஞ்சலி, அவரின் உடல் அருகே அமர்ந்து அழுதபடியே இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அடுத்து சேகர் மற்றும் அவரின் மனைவி அஞ்சலி ஆகிய இருவரின் உடலையும் ஒரே பல்லக்கில் வைத்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் அவர்களின் இறுதி சடங்கு நடந்தது. கணவன்-மனைவி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kudiyaththam husband and wife death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->