16 வயதில் பாலுறவு கொள்ளும் முடிவு - மேகாலய மாநில உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Meghalaya HC POCSO Case
16 வயது நிரம்பிய ஒரு சிறுவன், தான் பாலியல் உறவில் ஈடுபட வேண்டுமா? வேண்டாமா என்பதை முடிவு செய்யும் திறன் இருப்பதாக, மேகாலய மாநில உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு, சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அல்லது பாலியல் வன்கொடுமை உட்படுத்துவது, போக்சோ சட்டத்தின்படி குற்றமாகும்.
இந்தி குற்றவாளிக்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை முதல், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தன் மீது பதியப்பட்டுள்ள போக்சா வழக்கை ரத்து செய்யக்கோரி, 16 வயது சிறுவன் ஒருவன் மேகாலய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தான்.
சிறுவனின் அந்த மனுவில், நான் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. நானும் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். இருவரும் முழு சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டோம். எனவே என் மீது பதியப்பட்டுள்ள போக்ஸோ வாழ்க்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தான்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, டீன் ஏஜ் வயதில் உள்ள சிறுவர்களின் மனம் மற்றும் உடல் சார்ந்த வளர்ச்சியை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. அந்த அடிப்படையில் 16 வயது நபர் ஒருவர் தான் பாலுறவில் ஈடுபடுவது குறித்து தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கும் திறன் கொண்டவராக தர்க்கரீதியாக நாங்கள் நம்புகிறோம் என்று கருத்து தெரிவித்ததோடு, அந்த சிறுவன் மீதான போக்ஸோ வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.