கள்ளக்காதல் - விவாகரத்து! பணம் பறித்த மனைவிக்கு, உயர்நீதிமன்றம் மூலம் பாடம் கற்பித்த கணவன்! - Seithipunal
Seithipunal


திருமணத்துக்கு பின்னர் தகாத உறவால் விவகாரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு, ஜீவனாம்சம் பெற உரிமையில்லை என்று பஞ்சாப் - ஹரியாணா மாநில உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

அம்பாலாவை சேர்ந்தவர் சரத், இவர் அம்பாலா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.  அதற்க்கு அவர் கூறிய காரணம், தன் மனைவி சங்கீதா தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், திருமணத்திற்கு பிறகு வேறு ஒருவருடன் தகாத உறவில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த அம்பாலா நீதிமன்றம், சங்கீதாவிடம் இருந்து சரத்துக்கு விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்தது. 

விவகாரத்து ஆனதையடுத்து சரத் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று, முன்னாள் மனைவி சங்கீதா பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அப்போது, தகாத உறவு காரணமாகவே விவகாரத்து வழங்கப்பட்டது. இப்போது சங்கீதா தொடர்ந்து அந்த உறவில் தான் இருக்கிறார் என்பதை சரத் நீதிமன்றத்தில் நிரூபித்தார்.

இதனையடுத்து, தகாத உறவில் இருக்கும் சங்கீதாவுக்கு  ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்று பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab hariyana HC judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->