10ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்தி சென்ற பள்ளி மாணவன்! தேடுதல் வேட்டையில் சேலம் போலீஸ்!
Salem School Girl Kidnap love case
10 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி மயக்கி, காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொள்வதாக 12 ஆம் வகுப்பு மாணவன் கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை, 12 ஆம் வகுப்பு அப்பள்ளி மாணவன் கடத்தி சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஓமலூர் பகுதியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வாகுப்பு மாணவியை, 12 ஆம் வகுப்பு மாணவன் கடத்தி சென்றதாக பள்ளி மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர்.
![](https://img.seithipunal.com/media/CRIME 005.png)
புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் அந்த மாணவியை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய அந்த மாணவன், கடத்தி சென்றதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடத்திச்சென்ற மாணவனின் செல்போன் சிக்னலை வைத்து இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Salem School Girl Kidnap love case