காதல் திருமணம் செய்த பெண்ணை, காவு வாங்கிய கணவன்.! கொடைக்கானல் அருகே பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


கொடைக்கானலில் மாப்பிள்ளை முதலியார்புரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சொந்தமாக வாகனங்கள் சிலவற்றை வைத்து ஓட்டி வணிகம் செய்து வருகின்றார். செந்தில்குமாரும், மேல்மலை அருகே பூலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா (வயது 28) என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இவ்வாறு திருமணம் செய்த பின்னர் இவர்களுக்கு ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருக்கின்ற காரணத்தினால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதுகுறித்து, சங்கீதா நேற்று முன்தினம் அவரது தந்தை விஸ்வநாதனிடம் தெரிவித்து அழுது வந்துள்ளார். அதன் பின்னர் சங்கீதாவை சமாதானம் செய்து தந்தை தனது வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பின்னர் துக்கம் தாங்காத சங்கீதா விஷம் குடித்துள்ளார் எனவும், 

death, seithipunal

இதன் காரணமாக அவர் மயங்கியுள்ளார்  எனவும், செந்தில்குமார் அவரது தந்தை விஸ்வநாதனுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். உடனே வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு இருந்த சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

பின்னர் இது குறித்து சங்கீதாவின் தந்தை கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் விஸ்வநாதன் கொடுத்த மனுவில், குறிப்பிட்டு இருக்கின்றார். மேலும், அவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் மட்டுமே ஆகி இருப்பதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்து வருகின்றார். 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suicide in kodaikanal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->