#தமிழகம் | எந்த உறவும் இல்லை - மகளை காவல் நிலையத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்!
VEDACHANDUR KUTTAM LOVE MARRIAGE
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்த குட்டம் கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவர் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 19 வயது இளம் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறிவே, இந்த காதல் குறித்து இருவீட்டாருக்கும் தெரியவந்துள்ளது.
இரு விட்டாரும் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில்வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
![](https://img.seithipunal.com/media/CRIME 002.png)
தொடர்ந்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, வேடசந்தூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
இதனை அடுத்து இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மணமகன் வீட்டில் திருமணத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் காதல் ஜோடிகள் சேர்ந்து வாழ்வதற்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என்றும், அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் எழுதி கொடுத்துவிட்டு பெண் வீட்டார் சென்றனர். தொடர்ந்து காதல் தம்பதியை போலீசார் வழி அனுப்பி வைத்தனர்.
English Summary
VEDACHANDUR KUTTAM LOVE MARRIAGE