ஆறு மில்லியனைக் கடந்த சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


ஆறு மில்லியனைக் கடந்த சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் - வைரலாகும் புகைப்படம்.!

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த வரும், நகைச்சுவையாளரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் பாடலாசிரியருமாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். 

இவர் மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமைராஜா, வேலைக்காரன், ரெமோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

அதிலும், குழந்தைகளின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். இளம்பெண்களால் அண்ணா என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென்று ஒரு கணக்கை உருவாக்கி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதையறிந்த அவரது ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனின் கணக்கை பின்தொடர ஆரம்பித்துள்ளனர். தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனைக் கடந்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyan instagram followers cross six million


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->