"8வது படிக்கும்போதே கர்ப்பமாக்கி காட்டுவேன்" கானா புள்ளிங்கோவின் வக்ரம்.! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் எதையாவது சர்ச்சையாக தெரிவித்துவிட்டு அதற்கு பலியாவது தற்போது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒரு சிலருக்கு இந்த சமூக வலைதளங்களில் பிரபலமாவதால் புகழின் உச்சிக்கே சென்று சினிமா வாய்ப்புகள் கிடைக்கிறது. தங்களுடைய வியாபாரத்தை பெருக்க மிகப்பெரிய மார்க்கெட்டாக பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் இருக்கிறது. 

மேலும், டிக் டாக் போன்ற செயல்களில் நடிப்பவர்களுக்கு சீரியல், வெள்ளித்திரை என்று நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. பலருக்கு வாழ்க்கை தரும் விஷயமாக பேஸ்புக் போன்ற சோசியல் மீடியா இருந்தாலும், எதையாவது கருத்து என்ற பெயரில் பேசி நெட்டிசன்களிடம் அடிவாங்குவது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் கானாபாடகர் ஒருவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார்.

அந்த வீடியோவில் அவர், " குச்சி மிட்டாய் வாங்கி கொடுத்து.. எட்டாவது படிக்கும்போதே பெண்ணை கர்ப்பமாக்கி வாந்தி எடுக்க வைத்து விடுவேன். அப்போதுதான் என்ன விட்டு போகாது." என்று பெண்கள் குறித்து விரிவாகப் பாடியுள்ளார். அப்பொழுது பிரபல சமூகசீர்த்தவாதியாக பார்க்கப்படும் புரட்சிபாடல்களை பாடும் இசைவானியும் மேடையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இது குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாகவும் பார்க்கப்படுகிறது. மிகவும் வக்கிரமான மனநிலையில் பாடப்பட்ட இந்தப்பாடல் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பை பெற்று வருகிறது. இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Gana singer make lyrics against children it make child abusing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->