அரசு விளம்பரத்தில் "சீன கொடியுடன் ராக்கெட்".!! சமுக வலைதளங்களில் வைரல்.!!
China rocket photo in TNGovt advertisement in newspaper
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 17300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதோடு முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்து அவற்றை நாட்டிற்கு இன்று அர்பணித்தார்.
இதற்காக நேற்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற திருப்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நானே தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமருடன் தமிழக அமைச்சர் ஏவா வேலு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, புகைப்படங்களோடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நல மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் வெளியிடப்பட்ட இந்த விளம்பர புகைப்படத்தின் பின்னணியில் சீன ராக்கெட் புகைப்படம் இடம்பெற்று இருந்தது தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த விளம்பர புகைப்படத்தை பகிர்ந்து வரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
English Summary
China rocket photo in TNGovt advertisement in newspaper