எப்போது திரையில் தோன்றுவீர்கள்? ராஜமௌலியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


எப்போது திரையில் தோன்றுவீர்கள்? ராஜமௌலியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!

பிரபல இயக்குனரான ராஜமவுலி விளம்பர படம் ஒன்றில் தோன்றியதில், அவர் முழு நடிகராக வெள்ளித்திரையில் தோன்ற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செல்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் புதிதாக ஒப்போ ரெனோ 10 சீரிஸ் என்ற செல்போனை அறிமுகம் செய்கிறது. இந்த செல்போனுக்கான விளம்பர தூதராக இயக்குனர் ராஜமவுலி உள்ளார்.

’பாகுபலி’ மற்றும் ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படங்களின் மூலமாக சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் ராஜமவுலியின் பிரபல்யத்தை நம்பி விளம்பர நிறுவனங்கள் அவரை தொடர்பு கொள்ள தொடங்கியுள்ளன. அவற்றில் சில விளம்பர நிறுவனங்களை தேர்வு செய்து ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.

அந்த வகையில் தற்போது ராஜமவுலி தோன்றும் ஒரு விளம்பரம், சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைப்பார்க்கும் ரசிகர்கள் ஒரு திரை நட்சத்திரத்துக்கான முகவெட்டும், வசீகரமும் ராஜமவுலிக்கு இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர். 

அதே சமயம், ’எப்போது முழு நட்சத்திரமாக திரையில் தோன்றுவீர்கள்?’ என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். மகாபாரதக் கதையை பல்வேறு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருக்கும் ராஜமவுலி அதற்கு முன்னதாக, மகேஷ் பாபு தோன்றும் தெலுங்கு மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director rajamouli acting addvertiesment of oppo cellphone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->