கண்டா வரச்சொல்லுங்க.. கார்த்திக் கண்.., திவ்யாவுக்காக குரல்கொடுத்து கதறவைக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


கண்டா வரச்சொல்லுங்க பாடலை டிக் டாக்கில் காதலனை தொலைத்து தேடி வரும் திவ்யா என்ற பெண்மணியின் புகைப்படத்தோடு நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டத்தினை சார்ந்த திவ்யா என்ற திவ்யா கள்ளச்சி, டிக் டாக் மாய உலகில் அறிமுகமாகிய கார்த்திக் என்ற வாலிபரை காதலித்து வந்தார். ஒருகட்டத்தில் கார்த்திக் திவ்யாவை விட்டு சென்றதால், அவரை ஊரடங்கு காலத்திலும் நடந்து சென்றே தேட தொடங்கினார். 

ஊர் ஊராக, மாவட்டம் விட்டு மாவட்டம் என பேருந்து பயணத்திலும், நடைப்பயணத்திலும் வாழ்நாட்களில் பல நாட்களை தொலைத்த நிலையில், இறுதியாக கார்த்திக் தாலிகட்டும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியானது. இதன்பின்னர் இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அதிர்ச்சிதரும் வகையில் தஞ்சாவூரை சார்ந்த மற்றொரு டிக் டாக் பிரபல பெண்மணி, கார்த்திகை தன்வசப்படுத்தி வைத்திருப்பதாகவும், கார்த்திகை விட்டு தன்னை பிரிந்து செல்ல கூறி அவர் வற்புறுத்துவதாகவும் திவ்யா காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்திருந்தார். 

தற்போது மீண்டும் கார்த்திக் தலைமறைவாகியுள்ளதால், அவரை எங்கே என்று தேடி வரும் சூழலுக்கு மாய உலகத்தில் மாயக்காதலில் விழுந்த திவ்யா கள்ளச்சி தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், தனுஷின் கர்ணன் படத்தில் உள்ள கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் பிரபலமாகி வருகிறது. 

இந்த பாடல் நாட்டுப்புற பாடலில் இருந்து சுடப்பட்டது என கூறப்படும் நிலையில், நாட்டுப்புற குழுவினருக்கு நன்றி தெரிவித்து படக்குழு வெளியிட்டதாக புகைப்படமும் வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், கண்டா வரச்சொல்லுங்க, அந்த கார்த்திக்கை தேடி கூட்டி வாருங்க என்று பதிவு செய்து, திவ்யா பாடல் பாடுவது போல உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Divya Kallachi Dhanush Karnan Movie Kanda Varasollunga Song Trending Social Media


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->